close
Choose your channels

திருமண நாளில் ஸ்ரேயா சரண் வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்!

Saturday, March 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண், ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரேயா சரண் தனது திருமண நாளின்போது வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

’உனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா சரண், அதன் பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் நா அழகப்பன், கந்தசாமி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

நடிகை ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா சமீபத்தில் தனது திருமண நாளை கொண்டாடினார். இந்த சிறப்பு நாளில் தனது திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது ஸ்ரேயா சரண், த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான தெலுங்கு பதிப்பில் நடித்து வருகிறார் என்பதும், ஏற்கனவே அவர் நடித்த ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.