close
Choose your channels

குழந்தை பெற்ற பிறகும் கிறங்கடிக்கும் கிளாமர் உடை… வைரலாகும் பிரபல நடிகை புகைப்படம்!

Thursday, May 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வரும் நடிகை ஸ்ரேயா சரண் நீச்சல் உடை அணிந்துகொண்டு தனது கணவர், குழந்தையுடன் கடற்கரையில் விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழில் “எனக்கு 20 உனக்கு 18” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இதற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயம் ரவி, தனுஷ், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தார். தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம்வந்த இவர் இந்தி மற்றும் சில ஆங்கில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

பின்னர் ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மேலும் கொரோனா ஊரடங்கில் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த இவர் சமீபத்தில் இந்தத் தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்தார். தற்போது அழகான கணவர், குழந்தை என செட்டில் ஆன பிறகும் நடிகை ஸ்ரேயா சரண் தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சமூகவலைத் தளங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டுவரும் இவர் தற்போது கடற்கரையில் தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பிங்க் நிறத்தில் கிளாமரான நீச்சல் உடையை அணிந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் தாறுமாறான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.