close
Choose your channels

40 வயதா இவருக்கு? 'சிவாஜி' பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஸ்ரேயா சரண் தனது லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயது மட்டுமே குறையவே இல்லை என்பதுபோன்ற கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னர் நடிகர் ஜெயம் ரவி, தனுஷ், விஜய் என்று முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ திரைப்படம் இவருக்கு புது அடையாளத்தையே கொடுத்தது. இதனால் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களிலும் வாய்ப்புகள் குவித்து முன்னணி நடிகையானார்.

இந்நிலையில் பிரபல ரஷ்ய டென்னிஸ் வீரரான ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018 இல் திருமணம் செய்துகொண்டார். மேலும் கொரோனா நேரத்தில் இந்தத் தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தததையும் அவருக்கு ‘ராதா’ என்று பெயரிட்டதையும் பின்னர் அறிவித்து இருந்தனர்.

திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் கவனம் செலுத்திவந்த நடிகை ஸ்ரேயா சரண் தொடர்ந்து பிசியாகவே நடித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் ‘மியூசிக்கல் ஸ்கூல்‘ திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதைத்தவிர தமிழில் ‘சண்டைக்காரி’, ‘நரகாசூரன்’, போன்ற ஒருசில திரைப்படங்களிலும் தெலுங்கில் ‘ஆடா நாடே வேட நாடே’ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சினிமாவைத் தவிர பேஷன் விஷயத்தில் படு ஆர்வம் காட்டிவரும் நடிகை ஸ்ரேயா சரண் அவ்வபோது விருது விழாக்களில் கலந்துகொண்டு ரசிகர்களை மிரள வைக்கிறார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற ஷார்ட் கவுன் அணிந்து நடிகை ஸ்ரேயா சரண் போட்டோஷுட் நடத்திய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு 40 வயது என்றால் யாரும் நம்பவே முடியாது?‘, ‘இவருக்கு சினிமா வாய்ப்புத் தாருங்கள்‘ என்பது போன்ற கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.