close
Choose your channels

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள்

Tuesday, October 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ள 'அர்ஜூன்ரெட்டி' ரீமேக் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் பாலா இயக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ரேயா ஷர்மாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர்  'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் சூர்யா-ஜோதிகா மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' படத்திலும் ஒருசில காட்சிகளில் நடித்துள்ளார்.

3 வயது முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ஸ்ரேயா ஷர்மா தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தற்போது முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்ரேயா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் நாயகியாக பாலாவின் இயக்கத்தில் தமிழில் அறிமுகமாகும் பெருமை அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.