ஹாலிவுட் பட தொடக்கவிழாவில் பிரபல எழுத்தாளருடன் ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,May 23 2017]

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த 'சங்கமித்ரா' படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இதே கேன்ஸ் விழாவில் 'How to Talk to Girls at Parties' என்ற படத்தின் தொடக்க விழாவிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்த விழாவில் இந்த படத்தின் கதாசிரியரான நீல் கெய்மன் அவர்களும் கலந்து கொண்டார். நீல் மெய்மன் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் டுவிட்டரில் அறிமுகமாகி நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் கிடைத்த அறிமுகத்திற்கு பின்னர் சமீபத்தில் லாஸ் ஏஞ்சலில் நீல் கெய்மன் அவர்களை ஸ்ருதிஹாசன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஸ்ருதிஹாசன் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளவுள்ளார் என்பதை அறிந்து 'How to Talk to Girls at Parties' என்ற படத்தின் தொடக்க விழாவிலும் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று நீல் கோரிக்கை வைத்ததாகவும், அவரது கோரிக்கையை ஏற்று கொண்ட ஸ்ருதி, கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில் இந்த பட விழாவில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசன் குறித்து நீல் கெய்மன் கூறியபோது, "முதலில் நாங்கள் ஒருவருக்கொருவர் டுவிட்டரில் அறிமுகமானோம். நான் இந்தியாவைச் பார்க்க விரும்பியதை கேள்விப்பட்டு எனக்கு ஸ்ருதி உதவ முன்வந்தார், அவர் என்னுடைய ஒரு பெரிய ரசிகர். அதேபோல் ஸ்ருதி நடித்த திரைப்படங்கள் மற்றும் இசையில் அவரது திறமையை நான் பார்த்து வியந்தேன். அவர் மிகவும் புத்திசாலி. அவருக்காக நான் எழுதிய புத்தகங்கள் அனுப்பபி வைத்தேன்" என்று கூறியுள்ளார்.

More News

வெற்றிக் கதவை திறந்துவிட்டோம்: 'சங்கிலி புங்கிலி' பட நிறுவனம் பெருமிதம்

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் மற்றும் அதனையடுத்த வார நாட்களின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது...

சமுத்திரக்கனிக்கு கிடைத்த முதல் வெற்றியும் கடைசி சலுகையும்...

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி நடைமுறையை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.

பிரபல காமெடி நடிகர் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

பிரபல காமெடி நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான பாலாஜி மீது அவர் மனைவி தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

விரைவில் அதிரடி உத்தரவு வரும். சசிகலாவை சந்தித்த பின் கருணாஸ் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆரம்பத்தில் அதிமுக தலைவர்களும் நிர்வாகிகளும் சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர்.

'விஸ்வரூபம் 2' குறித்த முக்கிய தகவல்: கமல் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' திரைப்படம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து கடந்த 2013ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது...