தென்னிந்தியா என்ன வேற்று கிரகமா? ஸ்ருதிஹாசனின் காட்டமான பதில்!

  • IndiaGlitz, [Thursday,February 10 2022]

தென்னிந்தியாவிலிருந்து வந்த நீங்கள் எப்படி சரளமாக இந்தி பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு தென்னிந்தியா என்ன வேற்றுக்கிரகமா? என நடிகை ஸ்ருதிஹாசன் பதிலடி கொடுத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பல்வேறு அவதாரங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் தனது தங்கை மற்றும் காதலருடன் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியபோது, ‘தன்னிடம் ஒருவர் தென்னிந்தியாவிலிருந்து வந்த நீங்கள் எப்படி ஹிந்தி பேசுகிறீர்கள்? என்று கேட்டதாகவும் அதற்கு நான், ‘தென்னிந்தியா என்ன வேற்று கிரகமா? என்று பதில் அளித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் நாம் அனைவரும் படம் எடுக்கிறோம், கடுமையாக உழைக்கிறோம், இதில் தென்னிந்தியா வட இந்தியா என பாகுபாடு எதற்கு? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் 2022ஆம் ஆண்டில் பாரபட்சம் பார்க்க எங்களுக்கு நேரமில்லை என்றும் அவர் காட்டமாக கூறியுள்ளார்.

திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக தென் இந்தியா, வட இந்தியா என்ற பாகுபாடு இருந்துவரும் நிலையில் ஸ்ருதிஹாசனின் இந்த பதில் தக்க பதிலடியாக அமைந்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

More News

கொரோனாவை ஒழிக்க இந்திய விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி உலகமே தலைகீழாக மாறியிருக்கிறது.

வெட்டப்பட்ட மனைவியின் தலையோடு சாலையில் உலா வந்த கணவன்… உறைய வைக்கும் சம்பவம்!

ஈரான் நாட்டில் இளைஞர் ஒருவர் தன்னுடைய இளம் மனைவியின் தலையை

சிவகார்த்திகேயனின்  “SK 20” படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும்  “SK 20”படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அஜித்தின் 'வலிமை' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஹூமா குரேஷி!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் இந்திய திரையுலகமே மிகப் பெரிய

ரஜினியின் 'தலைவர் 169': சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.