close
Choose your channels

கமல்ஹாசன் மகளின் ஹாலிவுட் படம்.. ரிலீசுக்கு முன்பே விருதுகளை குவிக்கின்றதா?

Sunday, October 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரேமேன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதேபோல் சமந்தாவும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் ஹாலிவுட் படம் ‘தி ஐ’ (TheEye) என்ற படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் ஏற்கனவே கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது என்பதும் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் லண்டன் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளதால் ரிலீஸ்-க்கு முன்பே விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதிஹாசனின் ஹாலிவுட் திரைப்படமான ‘தி ஐ’ என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.