ஹாலிவுட் செல்லும் ஸ்ருதிஹாசன்!

  • IndiaGlitz, [Thursday,June 20 2019]

கோலிவுட் திரையுலகில் உருவாகும் படங்களில் ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிவதும், ஹாலிவுட் படங்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய நடிகர்கள் நடித்து வருவதும் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக நிகழ்ந்து வருகிறது. தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் நாளை வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். டிம் கின் என்பவர் இயக்கவுள்ள 'டிரெட்ஸ்டோன்' என்ற டைட்டில் கொண்ட இந்த தொடரில் ஜெர்மி இர்வின், பிரையன் ஸ்மித், ஒமர் மெட்வால்லி உள்பட முன்னணி அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

இந்த தொடரில் நிரா பட்டேல் என்ற கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். இந்த தொடரின் படப்பிடிப்பிற்காக விரைவில் ஸ்ருதிஹாசன் அமெரிக்கா செல்லவுள்ளார். ஏற்கனவே இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் ஹாலிவுட்டில் நடித்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் ஸ்ருதிஹாசனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சுசீந்திரனின் ஏஞ்சலினா: 110 நிமிடங்கள் மட்டுமே ஓடும் த்ரில் படம்

சுசீந்திரன் நடித்த 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' திரைப்படம் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் இயக்கி வரும் படங்களில் ஒன்றாகிய 'ஏஞ்சலினா' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட விஜய்யின் அட்டகாசமான போஸ்டர்

தளபதி விஜய்யின் பிறந்த நாள் வரும் 22ஆம் தேதி விஜய் ரசிகர்களால் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.

'தளபதி 63' டபுள் அப்டேட்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடித்து வரும் 63வது படத்தை கடந்த ஐந்து மாதங்களாக 'தளபதி 63' என்றே அழைத்து வரும் விஜய் ரசிகர்கள் வரும் 21ஆம் தேதி 6 மணி முதல் இந்த படத்தின் டைட்டில் பெயரை சொல்லி அழைப்பார்கள்.

மணிரத்னம் பார்ட்னராக மாறிய பிரபல சாமியார்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் பிசியாக உள்ளார். இடையில் அவரது உடல்நிலை

தமன்னாவுக்கு படுதோல்வி: தப்பிப்பாரா நயன்தாரா

இயக்குனர் சக்ரி டோலட்டி இந்தி மற்றும் தமிழில் இயக்கிய 'காமோஷி' மற்றும் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படங்கள் ஜூன் 14ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.