close
Choose your channels

ஸ்ருதிஹாசன் வயிற்றில் எழுதி பழகிய காதலர்: வைரல் வீடியோ

Friday, July 30, 2021 • தமிழ் Comments

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களாக சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் இருவரும் மும்பையில் உள்ள வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியானது

மேலும் காதலர் சாந்தனுவுடன் இணைந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்ருதிஹாசன் பதிவு செய்வார் என்பதும் இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் என்பதும் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த டூடுல் போட்டியில் அவர் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாந்தனு வரைந்த ஓவியங்களின் மத்தியில் ஸ்ருதிஹாசன் இருக்கும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது வயிற்றில் காதலர் சாந்தனு எழுதி பழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருதிஹாசனின் காதலருக்கு எழுதி பழக வேறு இடம் கிடைக்கவில்லையா? அவருடைய வயிறு தான் கிடைத்ததா? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்

ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியுடன் ’லாபம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz