close
Choose your channels

19 வயதில்.... ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பதில்!

Friday, February 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகள் சுருதிஹாசன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் என்பதும் அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவருக்கு சுமார் 16 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவ்வப்போது தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி சுவாரஸ்யமாக பதில் அளித்து வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ’எந்த வயதில் நீங்கள் தொப்புளில் வளையம் வைத்தீர்கள்’ என்று கேட்டதற்கு ’19 வயதில்’ என்று அவர் பதிலளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகம் பக்கம் வராமல் இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியுடன் ’லாபம்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.