close
Choose your channels

எப்போதும் எனக்கு ஒளியும் சக்தியும் அளிப்பவர் நீங்கள் தான்: ஸ்ருதிஹாசனின் நெகிழ்ச்சி பதிவு..!

Tuesday, April 22, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எப்போதும் எனக்கு ஒளியும் சக்தியும் அளிக்கிறவரும், எந்நேரமும் சிரிப்புக்கு காரணமானவரும் நீங்க தான், உங்களைதான் மிக அதிகமாக நேசிக்கிறேன் அப்பா என தந்தை கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க, அவருக்கு அருகே ஸ்ருதிஹாசன் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இந்த பதிவு இரண்டு மணி நேரத்தில் லட்சக்கணக்கான லைக்ஸை குவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் பிதாமகன், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன் , அக்ஷராஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே திரையுலகில் ஜொலித்து வருகின்றனர் என்பதும், குறிப்பாக ஸ்ருதிஹாசன், கமல்ஹாசனுடன் தேவர் மகன் உள்ளிட்ட சில படங்களில் பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் "கூலி", தளபதி விஜய் நடித்து வரும் "ஜனநாயகன்" இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த "ட்ரெயின்" உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும், தெலுங்கில் உருவாக்கி வரும் "சலார் " இரண்டாம் பாகத்திலும், இன்னொரு தெலுங்கு படத்திலும் அவர் நடித்து, பிசியாக நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 24 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள ஸ்ருதிஹாசன் வெகு அரிதாகவே ஸ்டேட்டஸ் போடுவார். அந்த வகையில் சற்றுமுன், அவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து, பலர் வாழ்த்துக்களை தெரிவித்து, கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment