'தக்லைஃப்' படத்தில் ஸ்ருதிஹாசன்.. 16 வருடத்திற்கு பின் அப்பா படத்தில் மகள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’தக்லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படம் குறித்த சில தகவல்கள் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்த படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பது தெரிய வருகிறது. 'விண்வெளி நாயகனே' என்று தொடங்கும் பாடலை தான் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாகவும், இந்த பாடலுக்கு கமல்ஹாசனின் காட்சிகள் திரையில் தோன்றும் வகையில் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2009ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'உன்னைப்போல் ஒருவன்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இணைந்து பாடியிருந்தனர். அதன் பிறகு, 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது, ரசிகர்களுக்கு ஆச்சரியமான தகவலாக உள்ளது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments