close
Choose your channels

காதலருடன் நெருக்கம்: ஸ்ருதிஹாசனின் லாக்டவுன் ஸ்பெஷல் புகைப்படங்கள்!

Thursday, May 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’ஏழாம் அறிவு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷின் ‘3’, விஜய்யின் ’புலி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து இருந்தார் என்பதும் தற்போது அவர் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இத்தாலி நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் அவரை பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவருடன் ஸ்ருதிஹாசன் டேட்டிங் செய்து வருவதாகவும், அவரே பல புகைப்படங்களை பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த புகைப்படங்களில் லாக்டவுன் நேரத்தில் சாந்தனு மட்டுமே தனக்கு உற்ற தோழனாக இருப்பதாக பதிவு செய்து அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புகைப்படத்திற்கு நடிகை தமன்னா உள்பட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.