'புலி' டப்பிங்கை தொடங்கினார் ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Sunday,August 16 2015]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் டிரைலர் வரும் 20ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டப்பிங் பேசும் பணிகள் ஆரம்பமாகிவிட்டதாகவும், முதல்கட்டமாக ஸ்ருதிஹாசன் டப்பிங் பேசி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னையில் உள்ள டப்பிங் தியேட்டர் ஒன்றில் 'புலி' படத்தின் தனது கேரக்டருக்காக ஸ்ருதிஹாசன் டப்பிங் செய்து வருகிறார். இவரை அடுத்து இந்த படத்தில் மகாராணியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி தனது சொந்த குரலில் டப்பிங் செய்யவுள்ளார் என்றும் அதனையடுத்து விஜய் டப்பிங் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 'புலி' படத்தை வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியிட இதன் தயாரிப்பாளர்கள் அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக எடுத்து வருவதாகவும், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவுபகலாக மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா ஸ்வேதா, வித்யூலேகா ராமன், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படத்தை பி.டி.செல்வகுமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.