யானையுடன் நட்பு.. ரிஸ்க்கான சண்டைக்காட்சிகள்.. 'படைத்தலைவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்து வந்த ’படைத்தலைவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், ஏற்கனவே ’சகாப்தம்’, ’மதுரை வீரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், தற்போது அவர் நடித்து வரும் படம் ’படைத்தலைவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படக்குழுவினர் சுமார் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில், சண்முக பாண்டியன் ரிஸ்க் எடுத்து நடித்த சண்டை காட்சிகள், யானையுடன் நெருக்கமான நட்பு கொண்ட காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்த வீடியோவின் இறுதியில் இந்த படம் மே 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சண்முக பாண்டியன், யாமினி சந்தர், முனிஷ் காந்த், கருடன் ராம் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை அன்பு என்பவர் இயக்கியுள்ளார்.
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments