'சி 3' தயாரிப்பாளரின் மனு தள்ளுபடி. சென்னை ஐகோர்ட் அதிரடி

  • IndiaGlitz, [Monday,February 06 2017]

சூர்யா நடிப்பில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ஹரி இயக்கிய 'சி 3' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. ஆனால் இந்த படத்திற்கு திருட்டு டிவிடி மற்றும் திருட்டுத்தனமாக இணையதளத்தில் புதிய படங்களை ஒளிபரப்புவோர்களிடம் இருந்து வெளிப்படையான சவால் வந்துள்ளது என்பதையும், இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளரின் உணர்ச்சிவசப்பட்ட கருத்தையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் 'சி 3' படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதிக்குமாறு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
மேலும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக கூறியுள்ளது.

More News

முதல்வர் பதவியில் சசிகலா. அரசியல் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் முதல்வர் பதவியை ஏற்ற ஓ.பன்னீர்செல்வம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்சனை, மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலை, எதிர்க்கட்சிகளுடன் அரவணைப்பு என சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்...

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது இளையதளபதியின் 'பைரவா'

பொங்கல் விருந்தாக கடந்த மாதம் 12ஆம் தேதி வெளிவந்த இளையதளபதி விஜய்யின் 'பைரவா' திரைப்படம் 25 நாட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...

விஜய்சேதுபதியுடன் இணையும் இளம் ஹீரோ

கடந்த ஆண்டு அதிக படங்களை வெளியிட்டவர் என்ற பெருமை பெற்ற விஜய்சேதுபதி, இந்த ஆண்டும் அவர் ஒப்பந்தமாகிவரும் எண்ணிக்கையை பார்க்கும்போது அதிக படங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதி நடிப்பில் 'புரியாத புதிர்', கவண், விக்ரம் வேதா, கருப்பன், 96, போன்ற படங்கள் தயாராகி வரும் நிலையில் தற்போது இளம் ஹீரோ ஒī

மீண்டும் மாணவர்களுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்

உலகையே திரும்பி பார்க்க வைத்த சமீபத்திய நிகழ்ச்சி மெரீனாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டம். இந்த போராட்டத்தின் பயனாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டத்தை இயற்றின...

காதலர் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான். 'அழகியே' அடுத்து 'வான்'

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே' சிங்கிள் பாடல் கடந்த 2ஆம் தேதி வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...