ஒரு கட் கூட இல்லாமல் 'யூ' சான்றிதழ்: சிபிராஜ் மகிழ்ச்சி!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபிராஜ் நடித்துள்ள அடுத்த படத்துக்கு ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் தந்துள்ள தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்
சிபிராஜ் நடிப்பில் கிஷோர் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாயோன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் சென்சார் ஆகி ’யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு கட் கூட செய்யாமல் யு சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆளரவமற்ற கோவில் ஒன்றில் மர்மமான நிகழ்வுகள் நடைபெறும் நிலையில் அந்த நிகழ்வுகளை கண்காணிக்க ஒரு கூட்டம் முயற்சி செய்கிறது என்பதும் அந்த கூட்டத்திற்கு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இசைஞானி இளையராஜாவின் மிரட்டலான இசையில் உருவான இந்த படத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் ஆடியோ மூலம் விளக்கும் புதிய முயற்சி ஒன்றை படக்குழுவினர் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.