close
Choose your channels

ரஜினிக்கும் சத்யராஜூக்கும் என்ன பிரச்சனை: உண்மையை உடைத்த சிபிராஜ்!

Tuesday, June 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கும் சத்யராஜூக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கோலிவுட் திரையுலகில் அடிக்கடி வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து நடிகர் சிபிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சிபிராஜ் நடித்த ’மாயோன்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சிபிராஜிடம், ‘ரஜினிக்கும் சத்யராஜூக்கும் என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சிபிராஜ் ’எந்த பிரச்சினையும் இல்லை’ என்றும் ’சமூக வலைதளங்களில் தான் இப்படி ஒரு வதந்தி பரவி வருகிறது’ என்றும் தெரிவித்தார்.

மேலும் ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் வில்லனாக நடிக்க அப்பாவை அணுகியபோது அவர் அப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்ததால் தான் அந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றும் மற்றபடி ரஜினிக்கும் அப்பாவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ரஜினி நடித்த ’ரங்கா’ திரைப்படத்தின் டைட்டில் தனது படத்தின் டைட்டிலாக வைத்ததால் ரஜினி கோபப்பட்டதாக கூறப்படுவது முழுக்க முழுக்க பொய் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.