சிபிராஜின் 'கட்டப்பாவை காணோம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,February 25 2017]

'நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை' படங்களை அடுத்து சிபிராஜ் நடித்து வந்த படம் 'கட்டப்பாவை காணோம்'. வித்தியாசமான டைட்டிலை கொண்ட இந்த படத்தை மணிசெய்யான் இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளிவந்துள்ளது.

'கட்டப்பாவை காணோம்' படம் வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது., இந்த தகவலை சிபிராஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதிசெய்துள்ளார்.

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி தமிழரசன், லிவிஸ்டன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வாஸ்து மீன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாகவும், இந்த வாஸ்து மீன் பேசும் வசனங்களுக்கு விஜய்சேதுபதி குரல் கொடுத்துள்ளதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆர்யா-ராணா-விஷால். த்ரிஷாவுக்கு பிடித்த ஹீரோ யார்?

பிரபல நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது சமூக வலைத்தளத்தில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருந்தார் என்பது தெரிந்ததே. தற்போது மீண்டும் அந்த தளத்தில் புகுந்துள்ள த்ரிஷா, சற்று முன்னர் ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார். இதோ ரசிகர்களின் கேள்வியும், த்ரிஷாவின் பதில்களும்...

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரனில் இணைந்த இன்னொரு ஹீரோ

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் சென்னை படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் மலேசியா செல்லவுள்ளதாகவும், அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...

ஜெயம் ரவியின் 'வனமகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி நடித்த 'போகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வெற்றி பட வரிசையில் இணைந்துள்ள நிலையில் அவர் நடித்து வந்த அடுத்த படமான 'வனமகன்' திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்ப்பு முடிந்தது என்பதை பார்த்தோம்...

தீபாவின் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாக நேற்றே கூறினார்...

'கபாலி' படம் நஷ்டம் என்பது உண்மையா? விளக்குகிறார் மதுரை திரையரங்கு உரிமையாளர்

பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உள்பட பெரிய ஸ்டார்களின் பல படங்கள் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததாகவும், ஆனால் அந்த படங்கள் 50 நாள், 75 நாள், 100 நாள், 150 நாள், 175 நாள், 200 நாள் ஓடியதாக பொய்யான தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் பேசினார்...