close
Choose your channels

விஜய் படத்திற்கு சிறப்பு அனுமதி: கருத்து கூறிய சித்தார்த்

Wednesday, March 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவுலகம் இதுவரை கண்டிராத வகையில் புதிய படங்கள் வெளியீடு இல்லை, படப்பிடிப்பு இல்லை, போஸ்ட் புரடொக்சன்ஸ் இல்லை என ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த வேலைநிறுத்தத்திற்கு அனைத்து யூனியன்களும் ஒற்றுமையாக ஆதரவு கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் 62 படம் உள்பட ஒருசில படங்களுக்கு மட்டும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் சங்கம் சிறப்பு அனுமதியளித்து அதற்குரிய காரணங்களையும் விளக்கியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து ஒருசில திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'போட்டிகள் நிறைந்த இந்த சினிமாவுலகில் ஒவ்வொரு படமும் சமமான சவாலை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் ஒருசில படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்து படப்பிடிப்பு நடத்த அனுமதிப்பது ஒற்றுமையை உடைக்கும் செயலாக அமைந்துள்ளது. அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.