முதல் பட நடிகையிடம் இருந்து வந்த வாழ்த்து.. சித்தார்த்தின் சந்தோஷத்தை பாருங்க.. வைரல் வீடியோ..

  • IndiaGlitz, [Wednesday,April 17 2024]

நடிகர் சித்தார்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது முதல் பட நடிகையிடம் இருந்து வந்த வாழ்த்து குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் தான் நாயகனாக நடிகர் சித்தார்த் அறிமுகமானார் என்பதும் அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ’சித்தா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தற்போது கூட அவர் ’இந்தியன் 2’ மற்றும் ‘தக்லைஃப்’ படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சித்தார்த் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரது முதல் படமான ’பாய்ஸ்’ நாயகி ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த் உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சித்தார்த் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வீடியோவை ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் சித்தார்த், முதல் பட நாயகியுடன் சந்தோஷத்துடன் இருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதிராவ் ஹைத்ரி திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்பதும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.