இயக்குனர்களும் நடிக்க வந்து சாகடிக்கிறாங்க: நடிகர் சித்தார்த்

  • IndiaGlitz, [Monday,July 16 2018]

மம்முட்டி நடிப்பில் ராம் இயக்கிய 'பேரன்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் பாலா, அமீர், சமுத்திரக்கனி, உள்பட பலர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சித்தார்த் பேசியபோது, '

இந்த விழாவில் அழகான இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக மிஷ்கின், அமீர், ராம், சமுத்திரக்கணி ஆகியோர்களை கூறலாம். இவர்களிடம் பத்து வருடங்களுக்கு முன் என்றால் நான் நடிப்பதற்கு சான்ஸ் கேட்டிருப்பேன். ஆனால் இப்போ இவங்களே நடித்து சாகடிக்கிறாங்க.

நீங்கள் எல்லாம் உலகப்புகழ் பெற்ற இயக்குனர்கள். நீங்கள் நடிக்க வராமல் இயக்குனர் பணியை மட்டும் பார்த்தால் எங்களை போன்றவர்களுக்கு நடிக்க சான்ஸ் கிடைக்கும். அவரவர் வேலையை அவரவர் பார்த்தால்தான் நன்றாக இருக்குக்ம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் நடிக்க வாருங்கள்' என்று கூறினார். சித்தார்த்தின் இந்த பேச்சு கலகலப்பை ஏற்படுத்தியது.