சிம்புவின் பாங்காங் பயணம் எதற்காக?

  • IndiaGlitz, [Monday,March 06 2017]

நடிகர் சிம்பு முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாதா கேரக்டர்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் சிம்புவின் மூன்றாவது கேரக்டரின் படப்பிடிப்பை வரும் 16ஆம் தேதி முதல் பாங்காங் நகரில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இங்கு 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பில் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், சந்தானம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் இந்த படத்தை பெரும்பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இதனிடையே சிம்பு, சந்தானம் நடிக்கவுள்ள 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார். அனிருத் மற்றும் குறளரசன் ஆகியோர் ஏற்கனவே இவருடைய இசையில் பாடியுள்ளனர் என்பதை பார்த்தோம். பாங்காங் படப்பிடிப்புக்கு செல்லும் முன்னர் சிம்பு அனைத்து பாடல்களின் ஒலிப்பதிவை முடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அவர் என்னிடம் கடைசியாக பகிர்ந்து கொண்டது இதுதான். அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் மனைவியின் உருக்கமான பதிவு

சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐதராபத்தை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை மட்டுமின்றி இந்தியாவில் வாழும் இந்தியர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது

என் தந்தை பிச்சை எடுப்பதை கண்ணால் பார்த்தேன். விஷால் உருக்கமான பேச்சு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அனைத்து தயாரிப்பாளர்களும் ஆவேசமாக முந்தைய நிர்வாகிகளின் இயலாமையை ஆவேசமாக விவரித்த நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால் உருக்கமாக பேசினார். விஷால் பேசியவதாவது...

'கபாலி', 'தெறி' படங்களை விற்று தருவோம். ஞானவேல்ராஜா வாக்குறுதி

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் புது அணியாக உருவாகியிருக்கும் விஷால் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது...

என் அளவுக்கு தமிழ் பேச முடியுமா? கன்னடர் என கூறியவர்களுக்கு பிரகாஷ்ராஜ் ஆவேச பதில்

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 5 அணி போட்டியிடுவதால் அனைத்து தரப்பினர்களும் தற்போது வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....

நலிந்த தயாரிப்பாளர்கள் என்ற வார்த்தை அகற்றப்படும். விஷால் அணியினர்களின் வாக்குறுதிகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோதண்டராமையா, ராதாகிருஷ்ணன், டி.சிவா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்...