close
Choose your channels

விரைவில் வெளியாகிறது சில்க் ஸ்மிதாவின் கடைசி படம்

Sunday, September 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா, வினுசக்கரவர்த்தியின் 'வண்டிச்சக்கரம்' படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின்னர் கோலிவுட் திரையுலகில் பெரும் புகழ் பெற்றார். 1980கள் மற்றும் 90களில் அவர் நடனம் ஆடாத படங்கள் குறைவு. மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில் திடீரென சில்க் ஸ்மிதா மர்மமான முறையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படங்கள் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி வசூலை குவித்தது. இந்த நிலையில் சில்க் ஸ்மிதா நடித்த கடைசி படமான 'ராக தாளங்கள்' என்ற படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. அந்த படத்தை வெளியிட தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது.

திருப்பதிராஜன் என்பவர் இயக்கிய இந்த படம் ஜாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததால் இந்த படத்தை வெளியிட சென்சார் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சில மாற்றங்கள் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் விரைவில் சில்க் ஸ்மிதாவின் கடைசி படத்தை அவரது ரசிகர்கள் பார்க்கும் வகையில் வெளியாகும் என்றும் திருப்பதி ராஜன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.