தனுஷின் ரசிகையாக மாறிவிட்டேன்: 'சில்லுன்னு ஒரு காதல்' குட்டிப்பாப்பா ஸ்ரேயா ஷர்மா பேட்டி!

  • IndiaGlitz, [Tuesday,June 08 2021]

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த வெற்றி திரைப்படங்களில் ஒன்று ’சில்லுனு ஒரு காதல்’என்பதும் இந்த படத்தில் சூர்யா ஜோதிகா மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின் சுட்டித்தனம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது தெலுங்கு இந்தி உள்பட ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ரேயா ஷர்மா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ’தான் தனுஷின் நடிப்பிற்கு ரசிகையாக மாறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்

மேலும் தான் இந்த அளவுக்கு புகழ் பெறுவதற்கு காரணம் ரசிகர்கள்தான் என்றும் அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் கிராமர் புகைப்படங்களுக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை தான் கண்டுகொள்வதில்லை என்றும் குறிப்பாக கமெண்ட்ஸ்களை தான் படிப்பதே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். என்னுடைய இன்ஸ்டாகிராமில் என்னுடைய சந்தோஷத்திற்காக அந்த புகைப்படங்களை பதிவு செய்து வருவதாகவும் அதனால் கமெண்ட்ஸ் குறித்து கவலைப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

 

More News

மகத்-பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை: புகைப்படம் வைரல்

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், கடந்த ஆண்டு பிராய்ச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே..

காவலரை கடுமையாக திட்டிய பெண் வக்கீல்...! கடுப்பாகி டுவிட் போட்ட கஸ்தூரி...!

காவல் அதிகாரிகளை கடுமையாக பேசிய, பெண் வக்கீல் மீது 7 துறைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் கமல்ஹாசன் - மகேஷ்பாபு?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தந்த மொழியிலுள்ள பிரபலங்கள் அந்தந்த மொழியில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது தென்னிந்திய பிரபலங்கள் இணைந்து நடிக்கும்

'இந்தியன் 2', 'விக்ரம்' படங்களுக்கு முன் ஒரு கமல் படம்?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்போது 'இந்தியன் 2' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் விரைவில் அவர் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

நடிகை அஞ்சலிக்கு திருமணமா? இணையத்தில் கசியும் தகவல்கள்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை அஞ்சலிக்கு திருமணம் என்ற தகவல் இணையத்தில் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது