'சில்லுன்னு ஒரு காதல்' ஸ்ரேயாவா இவர்? லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Monday,September 27 2021]

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்றான ’சில்லுனு ஒரு காதல்’ என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக குழந்தை நட்சத்திரமான ஸ்ரேயா சர்மா நடித்து இருந்தார் என்பதும் அவரது நடிப்பு இந்த படத்தில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மா அதன்பின் சில படங்களில் நாயகியாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா சர்மாவுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்ரேயா சர்மா சமீபத்தில் சட்டப்படிப்பை முடித்து உள்ளதாக கூறியதோடு அதன் சான்றிதழையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.