close
Choose your channels

முதல்முறையாக இணையும் சிம்பு-பிரபுதேவா

Friday, August 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிம்புவும், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற புகழுடன் நடிப்பு, நடனம், தயாரிப்பு, இயக்கம் பல துறைகளில் வெற்றி பெற்றவருமான பிரபுதேவா முதல் முறையாக ஒரு படத்தின் பாடலுக்காக இணைந்துள்ளனர்.
ஆம், 'சிம்பா' என்ற படத்திற்காக சிம்பு பாடிய பாடல் ஒன்றை பிரபுதேவா இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். 'பிஞ்சுல பிஞ்சுல' என்று தொடங்கும் இந்த பாடல் இளைஞர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரத் மற்றும் பிரேம்ஜி முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் பானுஸ்ரீ மெஹ்ரா, ஸ்வேதா அசோக், ரமணா மற்றும் பலர் நடிக்கின்றனர். அரவிந்த் ஸ்ரீதர் இயக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.