விக்ரம்பிரபுவின் 'வீரசிவாஜி'யில் இணைந்தார் சிம்பு

  • IndiaGlitz, [Saturday,May 14 2016]
சமீபத்தில் சிம்பு இசையமைத்து பாடிய ஓட்டு பாடல் தேர்தல் நேரத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்து வாரீசான விக்ரம் பிரபுவுக்காக சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.

விக்ரம்பிரபு தற்போது 'வாஹா' மற்றும் 'வீரசிவாஜி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'வாஹா' படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் 'வீரசிவாஜி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலான 'தாறுமாறு' என்று தொடங்கும் பாடலை சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என கருதி படக்குழுவினர் சிம்புவை அணுகினர். சிம்புவும் எவ்வித மறுப்பும் இன்றி இந்த பாடலை பாடிக்கொடுத்துள்ளார். நேற்று இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. விக்ரம்பிரபுவுக்காக சிம்பு பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாம்லி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை கணேஷ் விநாயக் என்பவர் இயக்கி வருகிறார். சுகுமார் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கபாலி' படத்தின் பஞ்ச் டயலாக் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' படத்தின் டீசர் உலக அளவில் பல சாதனைகள் நிகழ்த்தி வரும் நிலையில்...

விஜய் ரசிகருக்கு ஐடியா கொடுத்த விஷால்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நேற்று ஒரு தனியார் பேருந்தில் ஒளிபரப்பப்பட்டது என்பதும்...

ஐசர்வேலனின் 29வது நினைவு தின நிகழ்ச்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள்

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான ஐசரி கணேஷின் தந்தையுமான நடிகர் ஐசரிவேலன்...

'வடசென்னை' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? புதிய தகவல்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான 'பொல்லாதவன்' மற்றும் 'ஆடுகளம்' ஆகிய இரண்டு படங்களுமே வசூல் அளவில் நல்ல வெற்றியை பெற்று தந்ததோடு...

திருட்டு டிவிடிக்கு எதிரான நடவடிக்கைகளில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவை தற்போது பயமுறித்தி கொண்டிருக்கும் ஒரே விஷயம் திருட்டு டிவிடி பிரச்சனைதான். முன்பெல்லாம் படம் வெளியாகி...