கமல், விக்ரம் வரிசையில் இணைகிறாரா சிம்பு?

  • IndiaGlitz, [Thursday,March 31 2016]

சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெகுவிரைவில் அடுத்தடுத்து ஒரு சிறு இடைவெளியில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மூன்று வேடங்களில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.


இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ள ஒரு கேரக்டருக்காக 20கிலோ உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். இந்த படத்தின் மூன்று கேரக்டரில் ஒரு கேரக்டர் நார்மல் எடையுடனும், ஒரு கேரக்டர் 70 கிலோ எடையுடனும், இன்னொரு கேரக்டர் 90 கிலோ எடையுடனும் இருக்கும் என கூறப்படுகிறது. ஏப்ரல் இறுதிக்குள் சிம்பு உடல் எடையை கூட்டவுள்ளதாகவும் அதன்பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கமல், விக்ரம் போன்ற நடிகர்கள் தாங்கள் ஏற்றுக்கொள்ளும் கேரக்டர்களுக்காக உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் தங்கள் ஈடுபாட்டினை ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது சிம்புவும் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பின்லேடன் திருச்சிக்கு வரப் போறாராமே...

உலக வல்லரசு நாடான அமெரிக்காவையே கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர் பின்லேடன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில்...

ஸ்டார் கிரிக்கெட்: 8 அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்ட வரும் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 'ஸ்டார் கிரிக்கெட்' போட்டிகள் நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

விஜய்யின் 'தெறி'யில் உள்ளே நுழைந்தார் 'பருத்திவீரன்' அமீர்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளின் ரிலீஸ் உரிமைகளின் பிசினஸ் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில்...

விஜய்யின் 'தெறி'யில் மகேந்திரன் கேரக்டர் என்ன தெரியுமா?

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய 'தெறி' படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக விஜய் நடித்துள்ளார் என்பதும், டாக்டர் கேரக்டரில்...

விஜய் வடிவில் ரஜினியை பார்க்கின்றேன். இயக்குனர் மகேந்திரன்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது...