சிம்பு 46: டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,October 26 2020]

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதன்படி சற்று முன்னர் சிம்புவின் டுவிட்டர் தளத்தில் இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இந்த படத்திற்கு ’ஈஸ்வரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிம்பு பாம்பை கையில் வைத்திருக்கும் அட்டகாசமான போஸ்டரில் சிம்பு உண்மையாகவே உடம்பை குறைத்து ஸ்லிம்மாக இருப்பது சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்தாக உள்ளது.

அதுமட்டுமன்றி ’ஈஸ்வரனின் தாண்டவம் பொங்கல் திரையரங்குகளில்’ என பொங்கல் ரிலீஸ் என்பதையும் இந்த பர்ஸ்ட் லூக் போஸ்டர் ரசிகர்களுக்கு தகவலை தெரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சிம்பு ஜோடியாக இந்த படத்தில் நிதி அகர்வால் நடிக்க இருப்பதையும் எஸ் தமன் இசையமைக்க இருப்பதும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

More News

விக்ரமின் 'கோப்ரா': இன்று முதல் அடுத்தகட்ட பணி ஆரம்பம்

சீயான் விக்ரம் நடிப்பில், 'டிமாண்டி காலனி, 'இமைக்கா நொடிகள்' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் 'கோப்ரா'.

பாஜகவில் இணைந்த 'பிக்பாஸ் தமிழ் சீசன் 3' நடிகர்!

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து திரையுலக நட்சத்திரங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

பாகிஸ்தான் மற்றும் சீனா மீது போர்த்தொடுக்க தேதி குறிச்சாச்சு… பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து!!!

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியா போரிடும் தேதியை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துவிட்டார்

கொத்துக் கொத்தாக செத்து மடியும் சீல்கள்… அதிர்ச்சியில் விலங்குநல ஆர்வலர்கள்!!!

நமீபியா கடற்கரை பகுதியில் இதுவரை 7,000 சீல்கள் செத்து மடிந்து, கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல்

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.