தனுஷூக்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு, அனிருத்

  • IndiaGlitz, [Saturday,March 11 2017]

நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர், என பல்வேறு அவதாரங்களில் கோலிவுட்டில் வலம் வரும் தனுஷ் இயக்கிய முதல் படம் 'பவர்பாண்டி. இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தனுஷின் முதல் இயக்கம், மற்றும் பாடல்கள் வெற்றிக்கு திரையுலகினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரது திரையுலக போட்டியாளரான சிம்பு தனது வாழ்த்துக்களை தனுஷூக்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் 'சூரக்காத்து' பாடல் தன்னுடைய பேவரேட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைப்போலவே தனுஷ் படத்தில் அறிமுகமாகி இன்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அனிருத்தும் 'பவர்பாண்டி' படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 'சகோதரர்களே உங்கள் ஆல்பம் பெரும் வரவேற்பை பெற எனது நல்வாழ்த்துக்கள்' என்று அவர் கூறியுள்ளார்.

More News

தன்ஷிகா படத்தில் இணைந்த மணிரத்னம் நாயகன்

'கபாலி' புகழ் தன்ஷிகா தற்போது இயக்குனர் ரமணா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

ரஜினிகாந்த் வீட்டில் 'குற்றம் 23' படக்குழு

அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற படம் 'குற்றம் 23' 'என்னை அறிந்தால் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று உற்சாகமாக இருந்த அருண்விஜய்க்கு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்...

சுசித்ரா, மடோனாவை தொடர்ந்து ஸ்ரீதேவிக்கும் வந்த சோதனை

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் பல கோலிவுட் நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் கசிந்ததால் கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் இருந்தது.

'காற்று வெளியிடை'க்கு பின் கார்த்தியின் அடுத்த விஷுவல் விருந்து. ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது இந்த டீசருக்கு 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்ததே இந்த டீசரின் வெற்றிக்கு சான்றாக உள்ளது...

ஐந்து மாநில தேர்தல். உ.பியில் பாஜக முன்னிலை

கடந்த சில நாட்களாக உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கிட்டத்தட்ட மினி பொதுத்தேர்தல் போல நடந்து முடிந்திருக்கும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன...