அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன சிம்பு, தனுஷ் படங்கள்: டிசம்பரில் வெளியாகும் ஜெயம் ரவி படம்!

  • IndiaGlitz, [Saturday,October 29 2022]

டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த தனுஷ் மற்றும் சிம்பு படங்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் டிசம்பரில் ஜெயம் ரவியின் திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் இந்த படம் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் டிசம்பர் 14ஆம் தேதி சிம்புவின் ’பத்து தல’ படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் இந்த படமும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திபோட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தனுஷ், சிம்பு படங்கள் டிசம்பருக்கு ஒத்திபோடப்பட்டுள்ள நிலையில் ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்படம் டிசம்பரில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதால் வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி நடித்த ’பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

2.5 ஏக்கர், ரூ.3.5 கோடி சென்னையில் தயாராகும் லண்டன் ஜெயில் செட்: எந்த படத்திற்கு தெரியுமா?

 பிரபல இயக்குனர் ஒருவரின் படத்திற்காக லண்டன் சிறை போன்ற செட் 2.5 ஏக்கரில் ரூ.3.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

'கபாலி' கேரக்டரில் கிறிஸ் கெய்ல் நடிக்கும் தமிழ்ப்படம்: டைட்டில் அறிவிப்பு!

 தமிழ் திரையுலகில் ஏற்கனவே மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர் பிராவோ உள்பட ஒருசில கிரிக்கெட் வீரர்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மற்றொரு மேற்கிந்திய கிரிக்கெட் அதிரடி வீரரான கிறிஸ்

செஞ்சவன் வேற எவனோ ஒருத்தன்.. ராகவா லாரன்ஸ்-இன் 'ருத்ரன்' கிளிம்ப்ஸ் வீடியோ

 நடிகரும், நடன இயக்குனரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ருத்ரன்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 

நீங்க செய்ய வேண்டியதை செய்யுங்க.. அசீமை நேரடியாக கண்டித்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்ற டாஸ்க் நடந்த நிலையில் இதில் பல போட்டியாளர்களின் உண்மையான சொரூபம் வெளியே தெரிந்தது என்பதை பார்த்தோம்.

நடிகை சமந்தாவுக்கு என்ன சிகிச்சை? அவரே அளித்த நீண்ட விளக்கம்

நடிகை சமந்தாவிற்கு ஒரு முக்கிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதற்காக அவர் வெளிநாட்டுக்கு சென்றதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.