close
Choose your channels

சிம்பு-கவுதம் மேனன் படத்தின் கவிதைத்தனமான டைட்டில்!

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கவிருக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். கௌதம் மேனன் இயக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கின்றார் என்றும், பாடலாசிரியர் தாமரை பாடல்கள் எழுத உள்ளார் என்றும் டைட்டில் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது

Image

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டிலுக்கு மிக பொருத்தமான டைட்டில் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பொதுவாக கவுதம் மேனன் படங்களின் டைட்டில்கள் கவிதை வடிவில் இருக்கும் என்பதைப் போலவே இந்த டைட்டிலும் கவிதைத்தனமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.