எனக்கு வர்ற பிரச்சனைக்கு காரணம் நான் உண்மையா இருக்குறதுதான்: சிம்புவின் 'மஹா'டீசர்

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவான ‘மஹா’ படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் அவருக்கு ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு முதலில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக இருந்து, அதன்பின் அவரது கேரக்டர் விரிவுபடுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் திரில் காட்சிகளுடன் கூடிய இந்த படத்தின் டீசரை பார்க்கும்போது படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஹன்சிகா சிம்புவின் ரொமான்ஸ் மற்றும் சிம்புவின் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று தெரிகிறது. சிம்பு பேசும் வசனமான ’எனக்கு வர்ற பிரச்சனைக்கு காரணம் நான் உண்மையா இருக்குறதுதான்’ என்பது அவரது நிஜ வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றது.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. ஹன்சிகா தனது 50வது படம் என்பதால் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு மீண்டும் தமிழில் வாய்ப்பு அதிகம் பிடித்தாலும் ஆச்சரியப்பட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. யூ.ஆர்.ஜமில் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.