ஜீப்பில் பயணம் சிம்பு-ஹன்சிகா! மீண்டும் இணைகிறார்களா?

  • IndiaGlitz, [Thursday,June 06 2019]

ஹன்சிகா நடித்து வரும் 50வது திரைப்படமான 'மஹா' படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜீப்பில் செல்வது போன்ற காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பின்போது சிம்பு, ஹன்சிகா மிகவும் அன்யோன்யமாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஏற்கனவே பிரிந்த காதலர்களான சிம்பு-ஹன்சிகா மீண்டும் இணைவார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் இருவரிடம் இருந்து வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூறப்படுகிறது.

ஜமீல் இயக்கி வரும் 'மஹா' திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன், நாசர், சாயாசிங் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையில் மதி ஒளிப்பதிவில் சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.
 

More News

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் உதவி!

+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் எம்பிபிஎஸ் படிக்க முடியாத நிலையில் உள்ள பல மாணவ மாணவிகளில் ஒருவர் சஹானா.

நீங்க தற்கொலையா செய்விங்க! பா.ரஞ்சித்துக்கு பிக்பாஸ் பிரபலம் கேள்வி

நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து நேற்று இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'தளபதி 63' படத்தின் அசத்தலான அப்டேட்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளியாகவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

டானுக்கெல்லாம் டானுடா இந்தியா: ஜிவி பிரகாஷின் கிரிக்கெட் ஆன்ந்தம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் கிரிக்கெட் ஆன்ந்தம்

'தளபதி 63' படத்தின் தரமான அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்களின் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டது