close
Choose your channels

'மாநாடு' வெற்றி கொண்டாட்டம்: வைரல் புகைப்படங்கள்!

Saturday, November 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் நேற்று முன்தினம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடாத மழையிலும் இந்த படத்தை பார்ப்பதற்கு திரையரங்கில் முன் ரசிகர்கள் குவிந்து இருப்பதை பார்க்கும் போது இந்த படம் வசூலில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

அதில் ’மாநாடு’ படத்தின் கேக் வெட்டி சிம்பு, சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு ஊட்டுவதும், சுரேஷ் காமாட்சி சிம்புவுக்கு ஊட்டுவதுமான காட்சிகள் உள்ளன. இந்த புகைப்படங்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள், ‘மாநாடு 2’ எப்போது என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.