close
Choose your channels

விண்ணை தாண்டியும் வரவேணாம், வீட்டை தாண்டியும் வரவேணாம்: சிம்புவின் 'தப்பு பண்ணிட்டேன்' பாடல்!

Thursday, July 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு பாடிய ’தப்பு பண்ணிட்டேன்’ என்ற பாடலின் டீசர் நேற்று வெளியான நிலையில் இன்று அந்த பாடல் வெளியாகும் என இந்த பாடலின் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அந்த வகையில் சற்று முன்னர் இந்த பாடல் யுவன் சங்கர் ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் குரலில், அறிமுக இசையமைப்பாளர் ஏகே பிரியன் இசை அமைப்பில் உருவாகிய இந்த பாடலுக்கு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ளனர். விக்னேஷ் ராமகிருஷ்ணன் பாடல் வரிகளில், டாங்லி ஜம்போ என்பவர் இயக்கத்தில் உருவாகிய இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் மிக அருமையான மெலடி குரலில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் அருமையாக நடிப்பில் உருவாகியுள்ள இந்த பாடல் சற்று முன் வெளியாகிய நிலையில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.