close
Choose your channels

'மாநாடு' டிரைலர்: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு!

Monday, September 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் வெளியிட்ட நிலையில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவுபகலாக தொழில்நுட்ப கலைஞர்கள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ’மாநாடு’ படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் டிரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் ’ஆன் தி வே’ என பதிவு செய்து அத்துடன் டிரைலர் தற்போது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது ரசிகர்கள் எந்த நேரத்திலும் ’மாநாடு’ டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளி வரலாம் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.