close
Choose your channels

'மாநாடு' படத்தின் சூப்பர் சீக்ரெட்டை வெளியிட்ட சிம்பு!

Monday, November 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த படத்தின் டப்பிங் பணியையும் சிம்பு முடித்துவிட்டார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். எனவே ‘ஈஸ்வரன்’ படத்தை பொருத்தவரை சிம்புவின் பணி முற்றிலும் முடிவடைந்தது

இந்த நிலையில் சிம்பு இன்று முதல் வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்றும், இந்த படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்றுமுன் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தின் முக்கிய சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் சிம்பு ஏற்கனவே இஸ்லாமிய இளைஞராக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தில் சிம்புவின் கேரக்டர் பெயர் அப்துல் காலிக் என்று சிம்பு அறிவித்துள்ளதன் மூலம் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் புதிய ஸ்டில் ஒன்றையும் சிம்பு வெளியிட்டுள்ளார். இருப்பினும் அதில் சிம்புவின் முகம் தெரியவில்லை என்பதால் முழு கெட்டப்பை அறிய முடியவில்லை. ஆனாலும் விரைவில் இந்த படத்தின் போஸ்டர் அல்லது டீசர் வெளியாகும்போது சிம்புவின் முழு கெட்டப்பை தெரிந்து கொள்ளலாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.