close
Choose your channels

பிக்பாஸையே புலம்ப வைத்த சிம்பு: வைரல் வீடியோ

Sunday, April 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் பிக்பாஸ், சிம்புவின் கேள்விகளால் புலம்பிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸிடம் சிம்பு சில கேள்விகள் கேட்கிறார். முதலில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று சிம்பு கேட்டதற்கு, ‘நன்றாக இருக்கிறேன் என்று பிக்பாஸ் சொன்னவுடன் ’நீங்கள் எப்படி நன்றாக இருக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன் என சிம்பு கலாய்க்க, அதற்கு பிக்பாஸ், ’என்னுடைய மைண்ட்வாய்ஸ் அவ்வளவு சத்தமாகவா கேட்டுவிட்டது’ என்று பதில் கூறுகிறார்.

அதன் பின்னர் ‘இந்த வீட்டில் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துற ஒருத்தர் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? என்று சிம்பு கேட்டதற்கு, ‘எல்லார் முகத்தையும் ஒரு தடவை உற்று பாருங்கள் என்று பிக்பாஸ் காமெடியாக பதிலளித்தார்.

அதன் பின்னர் ’இந்த வீட்டில் யார் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? என்று சிம்பு கேட்க, அதற்கு பிக்பாஸ் ‘சந்தேகமே இல்லை, நான்தான்’ என புலம்பியபடி பதில் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.