close
Choose your channels

தனுஷூக்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு

Wednesday, October 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளீயாகிவுள்ளது. இந்த படத்தின் அதிகாலை காட்சிகள் ஆரம்பித்து பாசிட்டிவ் ரிசல்ட்டுக்கள் வர தொடங்கிவிட்டதால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர்.

இந்த நிலையில் தனுஷுடன் தொழிலில் போட்டியாளராக இருந்தாலும் நிஜத்தில் நட்பாக இருக்கும் நடிகர் சிம்பு, தனுஷின் 'வடசென்னை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் அவரது டீம் ஆகியோர்களுக்கு 'வடசென்னை' திரைப்படம் வெற்றியடைய என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சார்ப்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். நமது போட்டி தொழிலில் மட்டுமே, சமூக வலைத்தளங்களில் அல்ல. என்னுடைய ரசிகர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவெனில் நல்ல படத்திற்கு ஆதரவு கொடுங்கள் என்று சிம்பு வாழ்த்தியுள்ளார்.

சிம்புவின் இந்த வாழ்த்தால் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.