close
Choose your channels

சிம்பு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்: ஆசையை வெளியிட்ட இளம் ஹீரோ

Sunday, April 27, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன் என தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை நடிகர் சமீபத்தில் நடந்த விழாவில், சிம்பு முன்னிலையில் தனது ஆசையை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிம்பு ’வல்லவன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் என்பதும், ’மன்மதன்’ என்ற படத்தில் திரைக்கதை எழுதியுள்ளார் என்பதும் தெரிந்தது. மேலும், அவர் விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு மற்றும் ஹரிஷ் கல்யாண் கலந்து கொண்டனர். அப்போது தொகுப்பாளர்கள், ’சிம்பு, ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் இணைந்து நடிப்பீர்களா, குறிப்பாக அண்ணன் தம்பியாக நடிப்பீர்களா?’ என கேட்டபோது, ’அப்படி ஒரு நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்’ என்று சிம்பு கூறினார்.

அப்போது, ஹரிஷ் கல்யாண் ’அந்த படத்தை சிம்பு அவர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்தார். எனவே, நல்ல கதை அமைந்தால் சிம்பு மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்றும், அந்த படத்தை சிம்புவே இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment