இந்திய சினிமாவில் புதுவிதமான திரைக்கதை: சிம்பு இயக்குனரின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Saturday,January 25 2020]

சிம்பு நடித்த கெட்டவன் திரைப்படத்தை இயக்கிய என்.கே.கண்டி இயக்கிய அடுத்த திரைப்படம் டே நைட். முழுக்க முழுக்க த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் அமைக்காத வித்தியாசமான திரைக்கதை என கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறியதாவது:

‘ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் இது. மிகக்குறைந்த முதலீட்டில் மிகக்குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்கள்.

இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதை விட மர்டர் மிஸ்டரி படம் என்று சொல்லலாம். பாடல் காட்சிகள் எதும் இப்படத்தில் இல்லை. ஆனாலும், திகிலும் திருப்பங்களும் திரைக்கதை அமைப்புகளும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை. 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019 புலனாய்வு செய்து தேடி கண்டுபிடித்து முடித்துக் கொள்வதே இக்கதையின் சிறப்பம்சம்.

படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவார்கள். எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும் திகிலுடன் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

More News

பிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

மும்பையை சேர்ந்த பிரபல டிவி சீரியல் நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கமல், ரஜினியை அடுத்து அஜித் படத்தில் இணையும் நிவேதா தாமஸ்!

'பாபநாசம்' திரைப்படத்தின் கமலஹாசனின் மகளாக நடித்த நடிகை நிவேதா தாமஸ் சமீபத்தில் வெளியான 'தர்பார்' திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து தனது உருக்கமான நடிப்பில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்

அனுஷ்காவின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

நடிகை அனுஷ்கா நடித்த 'பாகமதி' என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. இதனை அடுத்து இரண்டு வருடங்களாக அனுஷ்கா நடித்த படம் எதுவும் வெளியாகாத

ரஜினிக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் அளித்த வழக்கறிஞர்

பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரபரப்பான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில்

சும்மா அதிருதுல்ல... ரஜினி விவகாரம் குறித்து அதிமுக அமைச்சர் பேட்டி!

ரஜினிகாந்த்-பெரியார் பிரச்சனை குறித்து ஒரு சில அதிமுக அமைச்சர்கள் ரஜினியை கண்டித்து விமர்சனம் செய்து வந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி