close
Choose your channels

'வெந்து தணிந்தது காடு' முதல்நாள் வசூல்: சிம்பு-கவுதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியின் சாதனை

Friday, September 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு, ஏஆர் ரகுமான் மற்றும் கவுதம் மேனன் ஆகிய மூவரும் சேர்ந்த கூட்டணியில் உருவாகும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று வெளியான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் இந்த மூன்று பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

’வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவின் உச்சகட்டமான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் அதன் காரணமாக ஓபனிங் வசூல் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் எதிர்பார்த்தபடியே ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் இரட்டை இலக்கங்களை தாண்டி உள்ளது. அதாவது தமிழகத்தில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏஆர் ரகுமானின் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி இந்த ஓப்பனிங் நாள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் இந்த படத்தின் வசூல் பிரமாதமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.