அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் வழியில் சிம்புவுக்கு கிடைத்த கிஃப்ட்!

  • IndiaGlitz, [Saturday,July 02 2022]

நடிகர் சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி ராஜேந்தர் அமெரிக்காவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய சிகிச்சைக்கு முழு ஏற்பாடுகளை செய்த சிம்பு தற்போது அவர் குணமாகி வருவதை அடுத்து இந்தியாவுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.

இன்று நிலையில் இந்தியாவுக்கு வரும் வழியில் அவர் துபாயில் இறங்கியதும் அங்கு அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் காத்திருந்தது. அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட் அரசு கோல்டன் விசா கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவிற்கு ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகள் கோல்டன் விசா கொடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு கோல்டன் விசா கிடைத்த நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்புவுக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா திரும்பும் சிம்பு முதல் கட்டமாக ’பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அதன்பிறகு ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிராஜேந்தர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'நினைச்சா தோணும் இடமே': விக்கி-நயன் லேட்டஸ்ட் ரொமான்ஸ் புகைப்படங்கள்!

நடிகை நயன்தாராவை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் 'நினைச்சா தோணும் இடமே' என்ற கேப்ஷனுடன் நயன்தாராவுடன் உள்ள ரொமான்ஸ் படங்களை

வானவில் போல் வந்து என் வாழ்க்கையை வண்ணமயமாக்கினாய்: மீனாவின் திருமண நாள் பதிவு

வானவில் போல் வந்து என் வாழ்க்கையை வண்ணமயமாக்கினாய் என மீனா கடந்த ஆண்டு திருமண நாளின்போது பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தனுஷ்: இனி வெற்றிமயம் தான்!

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் தனுஷ் மீண்டும் படங்கள் தயாரிக்க இருப்பதாகவும் அதிலும் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்க இருப்பதாகவும் இந்த 3 படங்களையும்

சத்குரு ஜக்கியுடன் கோல்ப் விளையாடும் சூர்யா-கார்த்தி பட நடிகை: வைரல் வீடியோ

சூர்யா, கார்த்தி படங்களில் நடித்த நடிகை சத்குரு ஜக்கி உடன் வாஷிங்டனில் கோல்ப் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'பொன்னியின் செல்வன்' எத்தனை மொழிகளில் ரிலீஸ்? படக்குழுவினர் அறிவிப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது