'கெடுத்திட்டியே என்னை கெடுத்திட்டியே': சிம்புவின் அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Saturday,December 04 2021]

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றி காரணமாக சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

சிம்பு தற்போது ’பத்து தல’, ;வெந்து தணிந்தது காடு’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள ’மஹா’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் அடுத்த ஆண்டு இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்த ’மஹா’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கெடுத்திட்டியே என்னை கெடுத்திட்டியே
உன் காதலால் என்னை கெடுத்திட்டியே
எடுத்திட்டியே ஐயோ எடுத்திட்டியே’
என்னோட உசுர எடுத்திட்டியே

என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில் விவேக் பாடல் வரிகளில் பென்னி தயால் குரலில் உருவாகிய இந்த பாடல் முதல்முறை கேட்கும்போது கவர்ந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, மானஸ்வி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜமீல் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில், லட்சுமண் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தலைவியைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள்!

நடிகர் விஜய்சேதுபதி – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாகத் தகவல்

காரை தள்ளுவதுபோல கையால் விமானத்தையே தள்ளிச்சென்ற சம்பவம்… வைரல் வீடியோ!

சாலையில் வாகனங்கள் பஞ்சராகி நின்றால் கையால் தள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால் ஓடுதளத்தில் டயர் பஞ்சராகி

'தளபதி விஜய்யின் வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்!

தளபதி விஜய் கதாநாயகனாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகியதை அடுத்து தளபதி விஜய்யின் 29 ஆண்டுகள் கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் சமூக

இவங்க ரெண்டு பேர் தொல்லை தாங்க முடியலை சார்: கமலிடம் கம்ப்ளெண்ட் செய்த ராஜூ!

தாமரை மற்றும் பிரியங்கா ஆகிய 2 பேர் தொல்லை தாங்க முடியவில்லை என்று கமல்ஹாசனிடம் ராஜூ கம்ப்ளெண்ட் செய்யும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் புதிய டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும்