'கெட்டவன்' இயக்குனருக்கு நல்லவன் ஆன சிம்பு

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

சிம்பு மீது பலவிதமான புகார்கள் திரையுலகில் கூறப்பட்டு வந்தாலும் அவரது தமிழ் உணர்வையும், உதவி செய்யும் மனப்பான்மையையும் அவரது எதிரிகள் கூட பாராட்டுவது உண்டு.

இந்த நிலையில் சிம்புவின் நின்றுபோன படங்களில் ஒன்றான 'கெட்டவன்' இயக்குனருக்கு சிம்பு சரியான சந்தர்ப்பத்தில் உதவி செய்துள்ள சம்பவம் ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது.

சிம்பு நடித்த 'கெட்டவன்' படத்தை இயக்கியவர் நந்து என்ற இயக்குனர். இந்த படம் பாதி மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தால் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நந்துவுக்கு வேறு வாய்ப்புகள் இன்று வரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தன்னை 'கெட்டவன்' இயக்குனர் அறிமுகம் செய்து கொண்ட நந்து ஊடகங்களில் கூறிய கருத்துக்கள் ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இவரது பேச்சை தொலைக்காட்சியில் பார்த்த சிம்பு அவரை அழைத்து பேசியதாகவும், அப்போது அவருடைய மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருக்கிறார் என்பதும், மருத்துவமனை பில்லை கூட கட்ட முடியாத நிலையில் இருப்பதையும் தெரிந்து கொண்டு, தனது உதவியாளர் மூலம் முழு மருத்துவமனை பில்லையும் கட்டி சிம்பு உதவி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவின் சரியான நேரத்திலான இந்த உதவிக்கு நந்து அவருக்கு நன்றி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி விரைவில் 'கெட்டவனை' தொடர்வோம் என்று சிம்பு நம்பிக்கையான வாக்குறுதி கொடுத்துள்ளதால் தற்போது புத்துணர்ச்சியுடன் இருக்கின்றாராம் நந்து

More News

ரஜினி-ரஞ்சித் படம் தொடங்குவது எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தில் நடித்து வருகிறார்.

பவர்பாண்டி' படப்பிடிப்பு முடிவது எப்போது? தனுஷ் தகவல்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய தனுஷ் முதன்முதலில் இயக்கி வரும் திரைப்படம் 'பவர் பாண்டி'.

ஆளுனரை சந்திக்கின்றனர் பன்னீர்செல்வம்-பழனிச்சாமி அணிகள்

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார் என்ற பரபரப்பான நிகழ்வுகளுக்கு இன்று அல்லது நாளை முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் போட்டியில் இருந்த சசிகலா சிறைக்கு சென்றுவிட்டதால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் ஆளுனரின் அழைப்புக்காக காத்திருந்தன...

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட 10,711.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் சற்று முன் பெங்களூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரண் அடைந்தனர்

சுதாகரன் மனு நிராகரிப்பு. அரை மணி நேரத்தில் சரண் அடைய உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் சற்று முன்னர் சரண் அடைந்த நிலையில் சுதாகரன் மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி நாளை சரண் அடைவதாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.