close
Choose your channels

பூஜா ஹெக்டேவின் அடுத்த படத்தை தயாரிக்கும் சிம்பு பட நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு

Saturday, June 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பூஜா ஹெக்டே நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சிம்பு படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ’காதல் அழிவதில்லை’. இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சார்மி கவுர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார் என்பதும், தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிவரும் ’லைகர்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சார்மி கவுர் மற்றும் வம்சி ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ’ஜேஜிஎம்’. இந்த படத்திலும் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க இருப்பதாகவும், பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ளார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.