இதுதான் சிம்புவின் 51வது படம்.. மாஸ் போஸ்டரை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 49வது படம் மற்றும் 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், சற்றுமுன் சிம்பு நடிக்க இருக்கும் 51வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்க இருக்கும் மூன்று படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இந்த நிலையில், சிம்பு நடிக்க இருக்கும் 51வது படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. God Of Love என்ற டைட்டிலுடன் வெளியாகியிருக்கும் இந்த போஸ்டரில், இந்த படத்தை இயக்குவது அஸ்வத் மாரிமுத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் பதிவில் ’காதல் இருக்கும் பயத்தினால் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை, மீறி அவன் பூமிக்கு வந்தால்? என்ற கேள்வி குறியுடன் சிம்பு அட்டகாசமாக இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது
அஸ்வத் மாரிமுத்து ஏற்கனவே ’ஓ மை கடவுளே" என்ற படத்தை இயக்கியுள்ளார். தற்போது அவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் "டிராகன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன், அவர் சிம்புவின் படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் போஸ்டரில் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது இந்த போஸ்டரில் இருந்தே தெரிய வருகிறது.
அடுத்தடுத்து மூன்று படங்களின் அறிவிப்பை வெளியிட்டு, சிம்பு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…
— AGS Entertainment (@Ags_production) February 3, 2025
மீறி அவன் பூமி வந்தால்…?❤️🔥🔥#HBDSilambarasanTR
Kattam Katti Kalakrom 🔥#VintageSTRmood#STR51 #AGS27#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@SilambarasanTR_ @Dir_Ashwath@archanakalpathi… pic.twitter.com/aC0V10D2Qb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments