சிம்புவின் 'ஈஸ்வரன்' குறித்த மாஸ் அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Tuesday,December 29 2020]

நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் ஜனவரி இரண்டாம் தேதி ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமன் இசையமைப்பில் யுகபாரதி எழுதிய இந்த படத்தின் பாடல்களுக்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சிம்புவின் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படம் சிம்பு, சுசீந்திரன் ஆகிய இருவருக்கும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

டசன் கணக்கில் பாம்புகள்… உடம்பு முழுக்க ஊர விட்டு மசாஜ்… இப்படி ஒரு புதுவரவா???

ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ் , தாய் மசாஜ், ஸ்வீடிஷ் மசாஜ் எனப் பல வகையான மசாஜ்களை கேள்விப் பட்டு இருப்போம்.

தலைவா... வா...வா: ரஜினி வீட்டின் தர்ணா போராட்டம் நடத்திய ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 31ஆம் தேதி அரசியல் வருகையை அறிவித்துவிட்டு ஜனவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கி வரும் மே மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் களம் இறங்குவார்

இளம் நடிகரின் மூன்றாவது படத்திற்கு உதவி செய்த லாவண்யா திரிபாதி!

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கிரண் அப்பாவரம் நடிக்கும் மூன்றாவது படத்தின் ஒரு காட்சியில் நடிகை லாவண்யா திரிபாதி வெளியீட்டு உதவி செய்துள்ளார்

தோனியை மனைவியுடன் சந்தித்த புதுமாப்பிள்ளை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான யுஜ்வேந்திரா சாஹல் நடன இயக்குனர் மற்றும் யூடியூப் பிரபலம் தனஸ்ரீ வெர்மா என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்

கட்டிப்பிடித்து அழாமல் வீட்டுக்கு வந்த உறவினரை கலாயத்த பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக இன்று முதல் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். முதலில் ஷிவானியின் தாயார் வந்து அறிவுரை கூறி சென்ற பின்